Tuesday 30th of April 2024 05:05:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுடன் போராடிய மணமகன்;  வைத்தியசாலையில் நடந்தது திருமணம்!

கொரோனாவுடன் போராடிய மணமகன்; வைத்தியசாலையில் நடந்தது திருமணம்!


திருமணம் நிச்சயமான அதே வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மணமகனுக்கு வைத்தியசாலை விடுதியில் வைத்தே திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவில் - டெக்சாஸ். மாகாணத்தில் உள்ள சான் அன்ரனியோ மெதடிஸ்ட் மருத்துவமனையில் மருத்துவா்கள், தாதியா்கள் மற்றும் ஊழியா்கள் இணைந்து இந்தத் திருமணத்தை நடத்திவைத்தனர்.

கார்லோஸ் முனிஸ் மற்றும் கிரேஸ் லெய்மான் ஆகியோர் ஜூலை நடுப்பகுதியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் மணமகன் முனிஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஜூலை 15 ஆம் திகதி சான் அன்ரனியோ மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவா்களின் திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

நோயாளியின் திருமணம் இரத்து செய்யப்பட்டது பற்றி அவரைக் கவனித்துவந்த தாதியரில் ஒருவரான மாட் ஹோல்ட்ரிட்ஜ் அறிந்துகொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் திருமணத்தை நடத்துவதற்கான யோசனை அவருக்கு வந்தது.

ஒரு நோயாளியை உளவியல் ரீதியாகக் கவனித்துக்கொள்வது உடல் ரீதியான அவா் விரைவாக மீண்டு வர உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக அவா் கூறினார்.

இதற்கு மணமகன் கார்லோஸ் முனிஸ் மற்றும் மணமகள் கிரேஸ் லெய்மான் ஆகியோரினதும் அவா்களின் குடும்பத்தினரதும் சம்மதம் பெறப்பட்டது.

இந்தத் திருமண ஏற்பாட்டைக் கேள்வியுற்ற வைத்தியசாலையில் உள்ள மேலும் பலா் தன்னார்வமாக உதவ முன்வந்தனர். வைத்தியசாலையில் வைத்தே திருமணத்தை மேலும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அவா்களும் இணைந்துகொண்டனர் என இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்த ஹோல்ட்ரிட்ஜ் கூறினார்.

தனது திருமண ஏற்பாடுகள் திட்டமிட்டவாறு நடைபெறுவதை அறிந்து உற்சாகமடைந்த மணமகன் முனிஸின் நிலைமையும் மேம்படத் தொடங்கியது.

சில நாட்களிலேயே அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாயை அகற்ற முடிந்தது. அவரால் சொந்தமாக சாப்பிடவும், குடிக்கவும் முடிந்தது என்று ஹோல்ட்ரிட்ஜ் கூறினார்.

ஆகஸ்ட் -11 செவ்வாய்க்கிழமை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் வைத்தியசாலையில் முனிஸைப் பராமரிக்க உதவிய மருத்துவமனை ஊழியர்களின் பங்கேற்புடன் திருமணம் நடந்தது. சுகாதார-பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திருமணத்தில் இவா்கள் பங்கேற்றனர்.

சமூக இடைவெளியைப் பின்பற்ற நடைபெற்ற திருமணபந்தத்தில் தம்பதியா் மகிழ்ச்சியாக இணைந்துகொண்டனர்.

விழாவின் முடிவில் தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவமனை ஊழியா்களின் அா்ப்பணிப்பான சேவைக்கும் மணமக்கள் நன்றி தெரிவித்தனர்.

உங்களுக்கு கடினமான வேலைகள் இருப்பதை நான் அறிவேன். எனினும் அவற்றுக்கு மத்தியிலும் உங்கள் மனிதாபிமானச் செயற்பாட்டுக்காக அனைவராலும் நீங்கள் பாராட்டப்படுகிறீா்கள் என திருமண நிகழ்வில் மணமகள் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

சவாலான நேரங்களில் மருந்துகள் மட்டுமே எங்கள் நோயாளிகளைக் குணப்படுத்தப் போதுமானதல்ல. அதனையும் தாண்டிய கவனிப்புக்களும் தேவை. அவா்கள் துரிதமாக மீண்டுவர மருந்துகளைத் தாண்டி உளவியல் ரீதியிலும் ஊக்கமளிக்க வேண்டும். இதனையே நாங்கள் செய்தோம் என திருமண ஏற்பாடுகளைச் செய்த தாதியரான ஹோல்ட்ரிட்ஜ் கூறினார்.

இப்போது முனிஸ் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகிறது எனவும் ஹோல்ட்ரிட்ஜ் தெரிவித்தார்.

திருமணத்திற்கு மறுநாளே அவர் தனது படுக்கையிலிருந்து எழுந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அவருக்கு செயற்கைச் சுவாசக் கருவி அகற்றப்பட்டது. அவா் தற்போது இயல்பாகச் சுவாசிக்கிறார் எனவும் ஹோல்ட்ரிட்ஜ் குறிப்பிட்டார்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE